அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது

அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது

அரசியலமைப்பு திருத்தத்திற்கு பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

22 Sep, 2017 | 2:57 pm

இலங்கை வரலாற்றில் அரசியலமைப்பு திருத்தத்திற்கு நாட்டின் பிரதான கட்சிகள் இணங்கியுள்ள முதலாவது சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது அடையாளம் மற்றும் கௌரவத்தை அங்கீகரிக்கக்கூடியதும் நியாயமானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமான அரசியலமைப்பு ஏற்பாடுகளே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால அபிலாசையாக உள்ளதாகவும் இரா. சம்பந்தன் தனது உரையில் நினைவுபடுத்தியுள்ளார்.

தீர்வு காணப்படாத நிலைமைகளால் முழு நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் பல்வேறு விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நியாயமானதும் ஏற்புடையதுமான போதியளவு தேசிய ஒருங்கிசைவுடன் கூடிய அரசியலமைப்பு செயற்பாடுகள் வெற்றிகரமாக நிறைவுபெறும் சந்தர்ப்பத்திலேயே, இந்த பிரச்சினைகளுக்கான உறுதியான தீர்வுகள் எட்டப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களும் சிங்களவர்களும் நாட்டைவிட்டு வௌியேறி, வௌிநாடுகளில் புகலிடம் கோரியுள்ளதால், நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

எனவே, நாட்டின் நற்பெயரை மீட்டெடுத்து சர்வதேசத்தின் மதிப்பைப் பெறவேண்டிய தேவை தறபோது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்