நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார் மலாலா

நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார் மலாலா

நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்தார் மலாலா

எழுத்தாளர் Bella Dalima

21 Sep, 2017 | 4:48 pm

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப் சாய் கடந்த இரண்டு மாதங்களாக ட்விட்டர் போன்ற சமூக இணையத்தளங்களின் மூலம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், யுனிசெப் நல்லெண்ணத் தூதரான நடிகை பிரியங்கா சோப்ராவை மலாலா சந்தித்துப் பேசியுள்ளார்.

நியூயார்க்கில் நடந்த இந்த சந்திப்பு குறித்து மலாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சந்திப்பின் போது அவர்கள் எடுத்த புகைப்படம் இணையத்தளங்களில் பதிவு செய்யப்பட்டு, அது தற்சமயம் வைரலாகப் பரவி வருகிறது.

மேலும், தங்கள் சந்திப்பு குறித்து பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமிலும் பதிவு செய்துள்ளார்.

மலாலாவின் தந்தை தனது தந்தையை ஞாபகப்படுத்துவதாக பிரியங்கா குறிப்பிட்டுள்ளார். மேலும், மலாலாவைத் தனது சகோதரி என்றும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்