மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான திருத்த சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்

மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான திருத்த சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்

எழுத்தாளர் Bella Dalima

20 Sep, 2017 | 6:35 pm

மாகாண சபைத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான திருத்த சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை அவசியம் என சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய சற்று நேரத்திற்கு முன்னர் சபையில் இதனைத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலில் 30 வீத மகளிர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக குறித்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், இந்த திருத்த சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் எதிர்ப்பை வௌிப்படுத்தி வருவது ஏன் என ஆளுங்கட்சியின் பெண் உறுப்பினர்கள் இன்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்