மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தல், தொகுதி முறையின் கீழ்: ஜனாதிபதி உறுதி

மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தல், தொகுதி முறையின் கீழ்: ஜனாதிபதி உறுதி

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2017 | 7:13 pm

மாகாண சபை தேர்தலையும் பொதுத் தேர்தலையும் தொகுதி அடிப்படையில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வடமத்திய மாகாண சபையின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (16) மாலை நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும், விருப்பு வாக்கு முறைமைக்கு பதிலாக, தொகுதி அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக ஜனாதிபதி இதன் போது கூறியுள்ளார்.

அரசாங்கத்திலுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், தமது தலைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை தொகுதி அடிப்படையில் நடத்துவது நாட்டு மக்களின் வெற்றியென தாம் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் நாட்டின் புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்