சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர்

சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள கலைமதி கிராம மக்களை சந்தித்தார் வட மாகாண முதலமைச்சர்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2017 | 8:39 pm

யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு கலைமதி கிராமத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள மக்களை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் இன்று சந்தித்தார்.

கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள மயானத்தை அகற்றுமாறு வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரகம் முன்னெடுக்கப்படுகிறது.

மக்களை சந்தித்த வடமாகாண முதலமைச்சர், மயானத்தையும் பார்வையிட்டுள்ளார்.

இந்த மயானத்தை அகற்றுமாறு கோரி கடந்த 68 நாட்களாக கலைமதி கிராம மக்கள் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்