ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி அமெரிக்கா பயணம்

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2017 | 8:34 pm

ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) காலை அமெரிக்கா நோக்கி பயணமானார்.

ஐக்கிய நாடுகளின் 72 ஆவது பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

அன்றைய தினம் மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றவுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இலங்கையின் அரசியல் இணக்கப்பாடு நல்லிணக்கம் மற்றும் சமாதானம் குறித்தும், 2017 ஆம் ஆண்டு வறுமையை ஒழிப்பது குறித்தும் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைத்திட்டம் தொடர்பாகவும் , பசுமை அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உலகத் தலைவர்களுக்கு இதன்போது தெளிவுபடுத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் எதிர்வரும் 23 ஆம் திகதி நிறைவடைவதுடன், இதன் போது ஜனாதிபதி அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளையும் சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

கொள்கை ரீதியாக தீர்மானம் எடுக்கும் நோக்கில்,அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் சமமான பிரதிநித்துவம் வழங்கும் வகையில் 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டம் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத் திட்டம், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவைக்கு நிரந்தர அங்கத்துவம் அற்ற பிரதிநிதிகளை நியமித்தல், பொதுச் சபையின் பிரேரணைகள், அறிக்கைகள் மற்றும் சிபாரிசுகளை வழங்கல் என்பன இதன் நோக்கமாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்