ஏறாவூரில் மகளுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் தாயொருவர் கைது

ஏறாவூரில் மகளுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் தாயொருவர் கைது

ஏறாவூரில் மகளுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் தாயொருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 Sep, 2017 | 4:08 pm

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மகளுக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோதிரமொன்றை தொலைத்ததால் குறித்த பெண், மகளுக்கு சூடு வைத்துள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

7 வயதான சிறுமியின் கால் பாதத்திலும், வயிற்று பகுதியிலும் கையிலும் சூடு வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

காயமடைந்த சிறுமி, ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சிறுமியின் தாய் நேற்று (16) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் இன்று (17) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்