வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் உயிரிழந்த பொது சுகாதார அதிகாரியின் இறுதிக் கிரியைகள் இன்று

வைத்தியர்களின் அசமந்தப்போக்கினால் உயிரிழந்த பொது சுகாதார அதிகாரியின் இறுதிக் கிரியைகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2017 | 7:11 pm

மின்சாரத் தடை மற்றும் வைத்தியர்களின் அசமந்தப் போக்கினால் உயிரிழந்த ஹிங்குராங்கொடை பொது சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஜீ.சுனில் கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றன.

ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயதுடைய எம்.ஜீ.சுனில் கருணாரத்ன மாரடமைப்புக் காரணமாக உயிரிழந்தார்.

மின்சார தடை மற்றும் வைத்தியர்களின் அசமந்தப்போக்கு காரணமாக அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமத்திக்கப்படும் வழியில் அவரின் உயிரிழப்பு சம்பவித்துள்ளது.

இறுதிக்கிரியைகள் மின்னேரியா – பொதல்கர லங்குவ தகனச்சாலையில் நடைபெற்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்