மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் உண்ணாவிரதம்

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் உண்ணாவிரதம்

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் உண்ணாவிரதம்

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2017 | 7:17 pm

தண்டனையை குறைக்குமாறு கோரி, மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனைக் கைதிகள் சிலர் இன்று (16) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போகம்பறை சிறைச்சாலையில் கைதிகள் நேற்று முன்தினம் போராட்டத்தை ஆரம்பித்ததுடன் வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகளும் அவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் விசேட குழுவொன்றினூடாக வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய 247 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறைச்சாலைகளில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் தொடர்பிலும் விசேட குழுவினூடாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய குறிப்பிட்டார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டதாக அவர் கூறினார்.

தமக்கான தண்டனையை குறைக்குமாறு கோரி 300 க்கும் அதிகமான கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்