தொடரும் மின்சார சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

தொடரும் மின்சார சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

தொடரும் மின்சார சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2017 | 7:47 pm

மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மின்சார சபையின் சில தொழிற் சங்கங்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பில் மின்சார நிலைய அதிகாரிகள், கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள், மின்பொறியியலாளர்கள் மற்றும் பொறியியல் உதவியாளர்கள் இணைந்து கொள்ளவில்லை.

பணிப்பகிஷ்கரிப்பு நடைபெற்றாலும் சேவைகளை வழமைப்போல் முன்னெடுக்க முடியும் என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

குளியாப்பிட்டியில் மின்மாற்றிக்கு சேதம் விளைவிப்பதற்கு முயற்சித்த, மின்சார சபை ஊழியர் கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டிய நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்