அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிப்பு

அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிப்பு

அர்ஜூன் அலோசியஸ் கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Sep, 2017 | 7:27 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், கோப் குழுவிற்கு போலியான தகவல்களை வழங்கியுள்ளதாக, நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழு முன்னிலையில் நேற்று தெரிவித்திருந்தார்.

டியூ. குணசேகரவின் தலைமையிலான கோப் குழுவிற்கு, அர்ஜூன் அலோசியஸ் போலியான தகவல்களை வழங்கியுள்ளார்.

அந்த குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுவதற்கு முன்னர், பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு, முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் இந்த விடயங்களும் கருத்திற் கொள்ளப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்