இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக கிரஹாம் லெப்ரோயை நியமிக்கத் தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவராக கிரஹாம் லெப்ரோயை நியமிக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2017 | 9:03 pm

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் தலைவர் பொறுப்புக்கு முன்னாள் டெஸ்ட் வீரரான க்ரஹம் லெப்ரோயை நியமிக்க தீர்மானித்துள்ளதாக கிரிக்கெட் நிறுவன தலைவரான திலங்க சுமதிபால குறிப்பிட்டார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.

53 வயதான கிரஹாம் லெப்ரோய், 9 டெஸ்ட் போட்டிகளிலும் 44 சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்