Bestweb 2018
Bestweb 2018

மலேசியப் பாடசாலையில் தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

மலேசியப் பாடசாலையில் தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழப்பு

By Bella Dalima

14 Sep, 2017 | 4:52 pm

மலேசியாவில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள மதரஸா பாடசாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி மாணவர்கள் உட்பட 25 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.