வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 1710 முறைப்பாடுகள் பதிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 1710 முறைப்பாடுகள் பதிவு

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் 1710 முறைப்பாடுகள் பதிவு

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2017 | 7:35 am

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்சம் பெற்று கொண்டமை தொடர்பில் 1710 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1020 முறைப்பாடுகள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போதிய ஆதாரங்கள் இன்மையினால் 404 முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் 3,964 முறைப்பாடுகளும் 2016 ஆம் ஆண்டு 3,450 முறைப்பாடுகளும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் 51 முறைப்பாடுகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்