சர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்  நடால்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார் நடால்

சர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தனதாக்கிக் கொண்டார் நடால்

எழுத்தாளர் Staff Writer

11 Sep, 2017 | 9:42 am

சர்வதேச டென்னிஸ் அரங்கில் 16 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ரபேல் நடால் தனதாக்கிக் கொண்டார்.

அமெரிக்க பகிரங்கத்தை வெற்றி கொண்டதன் மூலம் அவர் இந்த சிறப்பிற்கு பாத்திரமானார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரை ரபேல் நடால் வெற்றி கொண்ட மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

தென்னாபிரிக்காவின் Kevin Anderson க்கு எதிரான இறுதி போட்டியில் 6-3 6-3 மற்றும் 6-4 எனும் செட் கணக்கில் நடால் வெற்றி பெற்றார்.

கடந்த ஜூன் மாதத்தில் நடால் பிரென்ச் பகிரங்கத்தை வெற்றி கொண்டதுடன் ஒரே வருடத்தில் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் வெற்றியையும் பதிவு செய்துள்ளார்.

2013 இன் பின்னர் ஒரே வருடத்தில் இரண்டு பகிரங்க டென்னிஸ் தொடர்களில் அவர் செம்பியனாகியுள்ளார்.

தன்னால் இந்த வெற்றியை நம்பமுடியவில்லை என்றும் நடால் மகிழ்ச்சி வௌியிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்