வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்

வட மாகாண முதலமைச்சர் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்தார்

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2017 | 8:34 pm

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்தன தேரரை இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கண்டி அஸ்கிரிய மகா விஹாரையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் அனந்தி சசிதரனும் நேற்று மாலை போகம்பறை சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து முதலமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர்…

[quote]குற்ற ஒப்புதலுக்கு அமைவாக மாத்திரமே இவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகின்றது. சட்டத்திற்கமைய ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதன் காரணமாகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என நாங்கள் கோருகின்றோம். அனைத்து வழக்குகளிலும் ஒப்புதல் வாக்குமூலம் மாத்திரமே சாட்சியங்களாக உள்ளன.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்