கிளிநொச்சியில் வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் 2 வயது சிறுவன் பலி

கிளிநொச்சியில் வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் 2 வயது சிறுவன் பலி

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2017 | 7:35 pm

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பரவிய தீயினால் இரண்டு வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எரிகாயங்களுக்குள்ளான சிறுவனின் தந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னைநீராவி கண்ணகிபுரம் பகுதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரான 27 வயதுடைய சிவசுப்பிரமணியம் ரமேஸ்குமார் மற்றும் அவரது இரண்டு வயதான மகன் ரமேஸ்குமார் சுகித் ஆகியோர் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று (10) காலை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தக நிலையத்திற்கு தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்