இராணுவ தளபதி முதல் சிப்பாய் வரை அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும் – ஜனாதிபதி

இராணுவ தளபதி முதல் சிப்பாய் வரை அனைவரையும் அரசாங்கம் பாதுகாக்கும் – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

10 Sep, 2017 | 7:12 pm

ஹொரவ்பொத்தான ரிட்டிகஹ விகாரையில் அமைக்கப்பட்டுள்ள நீர் விநியோக கட்டமைப்பு இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

சிறுநீரக நோய் ஒழிப்பு தேசிய திட்டத்தின் கீழ் சிறுநீரக நோய் பரவும் அபாயமுள்ள பிரதேச மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

383 மில்லியன் ரூபா செலவில் இந்தத் திட்டம் அமைக்கபப்பட்டுள்ளதுடன், அனுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற 10 திட்டங்கள் இன்று ஜனாதிபதியினால் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

பொலன்னறுவை மாவட்டத்தில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சிறுநீரக ஒழிப்பு ஜனாதிபதி செயலணியிளால் அமைச்சிற்கு 45 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

இதன் போது இரண்டு பாடசாலை மாணவர்கள் வழங்கிய இரண்டு கடிதங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி இங்கு கருத்துத் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்