மீவத்தபுரவில் நிர்மாணிக்கப்பட்ட 40 ஆவது மாதிரி கிராமம் மக்களிடம் கையளிப்பு

மீவத்தபுரவில் நிர்மாணிக்கப்பட்ட 40 ஆவது மாதிரி கிராமம் மக்களிடம் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 7:43 pm

திம்புலாகல – மீவத்தபுரவில் நிர்மாணிக்கப்பட்ட 40 ஆவது மாதிரி கிராமம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவில் தலைமையில் இடம்பெற்றது.

சந்தரெஸ்கம என பெயரிடப்பட்ட இந்த மாதரிக்கிராமத்தின் நிர்மாணப்பணிகளுக்காக 35.7 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

34 பயனாளிக் குடும்பங்களுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்பட்டதுடன், 684 குடும்பங்களுக்கான வீட்டுக் கடன் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது 2016 ஆண்டின் குடியிருப்பு தேவை தொடர்பான ஆய்வறிக்கை அமைச்சர் சஜித் பிரேமதாசவினால், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்