மகிழ்ச்சி, சமாதானம், சுபீட்சம் நிறைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிலையான அபிவிருத்தி அவசியமாகும்

மகிழ்ச்சி, சமாதானம், சுபீட்சம் நிறைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிலையான அபிவிருத்தி அவசியமாகும்

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 8:48 pm

பண்டாரநாயக்க சர்வதேச கற்கை நிலையத்தின் 2017 ஆம் ஆண்டிற்கான பாடத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பில் இன்று (09) நடைபெற்றது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தலைமை உரையினை கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல் நிகழ்த்தினார்.

[quote]மகிழ்ச்சி சமாதானம் மற்றும் சுபீட்சம் நிறைந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு நிலையான அபிவிருத்தி அவசியமாகும். இந்த இலக்கை அடைவதில் உள்ள தடைகளை நீக்குவது முக்கிய தேசிய சவாலாகும். அத்தோடு சர்வதேச பொறுப்பாகும். தொழில்நுட்பம் துரிதமாக மாற்றமடைகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் கொள்கைகளை வகுக்கின்றது. எனினும் தொழில்நுட்பத்தின் மாற்றம் கொள்கை வகுப்பு மாற்றத்தின் வேகத்தை விட அதிகமாகும். உதாரணமாக செயற்கை புலன் தொழில்நுட்பம் எமது நாட்டின் தொழில் சந்தையில் ஏற்படுத்துகின்ற தாக்கம் தொடர்பில் இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் தமது நிலைப்பாட்டினை அறிவிப்பதை நான் காணவில்லை.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்