பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு

பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 2,599 பேருக்கு பதவி உயர்வு

எழுத்தாளர் Staff Writer

09 Sep, 2017 | 3:15 pm

2,599 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு ஒரே தடவையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபள் 2075 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை புதிய உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களாக 189 பேர் பதவி உயர்த்தப்பட்டுள்ளதுடன், 34 மகளிர் உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் பதவி உயர்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சாரதிகளாக பணிபுரிந்த 292 கான்ஸ்டபள்களும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

பொலிஸ் சார்ஜன்கள் 09 பேர் போக்குவரத்து உதவி இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்