மக்கள் சக்தி திட்டத்தினூடாக கிளிநொச்சி – கங்காதரன் குடியிருப்பிற்கான வீதி புனரமைப்பு

மக்கள் சக்தி திட்டத்தினூடாக கிளிநொச்சி – கங்காதரன் குடியிருப்பிற்கான வீதி புனரமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Sep, 2017 | 8:13 pm

மக்கள் சக்தி திட்டத்தினூடாக புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி – கங்காதரன் குடியிருப்பிற்கான வீதி இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” செயற்றிட்டத்தினூடாக நியூஸ்பெஸ்ட் குழுவினர் கங்காதரன் குடியிருப்புப் பகுதிக்கு சென்றிருந்த போது, வீதி சீரின்மை தொடர்பில் மக்கள் முறையிட்டிருந்தனர்.

இதனைக் கருத்திற்கொண்டு, மக்கள் சக்தி செயற்றிட்டக்குழு எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குறித்த பாதையை புனரமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை கடந்த மார்ச் மாதம் முன்னெடுத்திருந்தது.

குறுகிய இடைவௌியில் பாதை புனரமைக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் நியூஸ்பெஸ்ட் உயரதிகாரிகள் மற்றும் எம்.ஏ.எஸ். ஹோல்டிங்ஸ் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்