பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

08 Sep, 2017 | 3:22 pm

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கான இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான காப்புறுதித் திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

சுரக்ஸா என்ற பெயரில் இந்த காப்புறுதித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

5 வயது முதல் 19 வயது வரையான 45 இலட்சம் மாணவர்களுக்கு இந்த காப்புறுதித் திட்டம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இந்த காப்புறுதித் திட்டம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் என கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்