அரச நிறுவனங்களின் கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன

அரச நிறுவனங்களின் கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன

அரச நிறுவனங்களின் கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

08 Sep, 2017 | 4:01 pm

அரச நிறுவனங்களின் கடந்த ஆண்டிற்கான கணக்காய்வு அறிக்கைகளை இம்மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்தார்.

சுமார் 1500 கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

எனினும், தற்போது 300 நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

ஏனைய அறிக்கைகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

அரச நிறுவனங்களின் கடந்த ஆண்டிற்கான வரவு – செலவு விபரம், நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட செயற்றிட்டங்கள் என்பன தொடர்பில் கணக்காய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்