மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவிற்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

மஹிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவிற்கு 3 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 4:00 pm

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விஹாரைகளில் இலவசமாக வௌ்ளைத்துணி விநியோகிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் குற்றவாளிகளான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குற்றவாளிகளுக்கு தலா 20 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தலா 50 மில்லியன் ரூபாவை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு நட்டஈடாக செலுத்த வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்தி விஹாரையில் சில் எடுத்தவர்களுக்கு வௌ்ளைத்துணி விநியோகிக்கப்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தன.

பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்