மஹிந்த  உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

மஹிந்த உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியினருக்கும் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 10:37 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.

அரசாங்க அதிகாரிகள் தேர்தலில் ஈடுபடும் போது உள்ள புதிய சட்டதிட்டங்கள் குறித்து இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதனைத் தவிர, தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மேலும் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்