பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் சார்பில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை: நிஹால் பெர்னாண்டோ

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் சார்பில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை: நிஹால் பெர்னாண்டோ

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் சார்பில் இனிமேல் ஆஜராகப்போவதில்லை: நிஹால் பெர்னாண்டோ

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 3:46 pm

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் சார்பில் இனிமேல் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகப்போவதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் பெர்னாண்டோ இன்று உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேனவிடம் சாட்சியப்பதிவு நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் சட்டத்தரணி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாக்குமூலமளிப்பதற்காக அர்ஜுன் அலோஷியஸ் இன்று முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலமளிக்குமாறு அர்ஜுன் அலோசியஷுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று (06) அறிவித்தல் பிறப்பித்திருந்தது.

முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இரசிய உள்ளகத் தகவல்கள் அர்ஜுன் அலோஷியசுக்கு கிடைத்துள்ளதாக நேற்று தெரியவந்தது.

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பிரதம கொள்வனவாளர் நுவன் சல்காது, ஆணைக்குழுவில் நேற்று சமர்ப்பித்த தொலைபேசி உரையாடல்கள் மூலம் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்