பாகிஸ்தானில் பருவமழையால் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பருவமழையால் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பருவமழையால் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 4:28 pm

பாகிஸ்தானில் இவ்வாண்டு பெய்த பருவமழைக்கு 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித்தீர்த்த பெருமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.

வெள்ளநீரில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் ஜூன் 26 முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 39 குழந்தைகள் உட்பட 164 பேர் உயிரிழந்துள்ளனர்.

சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

440 வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை தேசிய பேரிடர் முகாமைத்துவ மீட்புப் படையினர் மீட்டு, பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை அங்கு பருவ மழை பெய்து வருகிறது.

ஆனால், இவ்வாண்டு பெய்த மழையால் பல பகுதிகளில் பலத்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்