நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை: வீதிகள் பல நீரில் மூழ்கின

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 3:30 pm

நாட்டின் அநேகமான பகுதிகளில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது.

சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கொழும்பில் இன்று அதிகாலை பெய்த கடும் மழையால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் குக்குலே கங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது.

இந்த நிலையில் அகலவத்த, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர, இங்கிரிய, பதுரலிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட மற்றும் அயகம ஆகிய பகுதிகளில் வௌ்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் இடம்பெறுவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

களுத்துறை, காலி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் புவக்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

இந்த பகுதியூடாக சிறிய ரக வாகனங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய, வாகனங்களை கொஸ்கம, சாலாவ வழியாக துன்மோதர ஊடாக கொழும்பு மற்றும் அவிசாவளையை நோக்கி செலுத்துமாறு பொலிஸார் சாரதிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்