English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
07 Sep, 2017 | 8:44 pm
கோப் குழுவின் அங்கத்தவராக செயற்பட்ட காலப்பகுதியில், அங்கு முன்வைக்கப்பட்ட எவ்வித தகவல்களையும் சட்டவிரோதமாக எவருக்கும் பெற்றுக்கொடுக்கவில்லை என்பதை பொறுப்புடன் கூறுவதாக பிரதமர் செயலணியின் தலைமை அதிகாரி ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
முறிகள் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜரான ஒருவர், தனது மகனின் பெயரைக் குறிப்பிட்ட போதும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் எவற்றையும் முன்வைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
ரோசி சேனாநாயக்க இன்று மாலை விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடல் 2016 ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் அந்த காலப்பகுதியில் தாம் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை எனவும் ரோசி சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கும் தனது மகனுக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் ரோசி சேனாநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 Nov, 2020 | 04:50 PM
22 Sep, 2020 | 03:23 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS