கொழும்பு, களுத்துறையில் கன மழை: மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

கொழும்பு, களுத்துறையில் கன மழை: மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 8:34 pm

கொழும்பு, களுத்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதனால் மக்களின் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் கடும் மழையினால் ஹொரணை – மில்லேனியப் பிரதேசத்தில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

களுத்துறை – அகலவத்தை மற்றும் தொடம்கொட பிரதேசங்களிலும் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடம்கொட பிரதேசத்தில் வீடொன்றின் மீது இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை, பத்தரமுல்ல – பொல்துவ வீதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

கொழும்பின் பல குறுக்கு வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அதிக மழை காரணமாக கொலன்னாவை, சேதவத்த ஶ்ரீ சித்தார்த்த கல்லூரி நீரில் மூழ்கியுள்ளது.

கம்பஹா – கொழும்பு பிரதான வீதியின் மிரிஸ்வத்த பகுதியும் நீரில் மூழ்கியுள்ளது.

பலபிட்டியவை அண்மித்த பகுதியில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதால், அப்பகுதி மீனவர்கள் கடற்றொழிலுக்கு இன்று செல்லவில்லை.

மொரகொட கங்கை பெருக்கெடுத்துள்ளமையால் காலி, மிரிஸ்வத்த, சமகிவத்த உள்ளிட்ட பல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில், நுவரெலியா மற்றும் ஹட்டன் பிரதேசங்களிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்