காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் 200 ஆவது நாளை எட்டியது

எழுத்தாளர் Bella Dalima

07 Sep, 2017 | 9:41 pm

கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று 200 ஆவது நாளை எட்டியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறும், காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உண்மையைக் கண்டறியுமாறும் வலியுறுத்தி கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி முதல் மக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

இதற்கமைய, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆரம்பித்த போராட்டம் கிளிநொச்சி – கந்தசுவாமி ஆலயம் அருகில் இன்று 200 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் இந்த போராட்டத்தில் இணைந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்