பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2017 | 7:22 am

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணைக்காக இன்று திறக்கப்படவுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முடிவடையவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை 2017 ஆம் ஆண்டிற்காக உயர்தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் காரணமாக இம்மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகள் முழுமையாக மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரி , கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி , கண்டி விஹாரமகாதேவி மகளிர் பாடசாலை, கண்டி ஸ்வர்ணமாலி மகளிர் பாடசாலை மற்றும் கண்டி சீத்தாதேவி கல்லூரி ஆகியன இவ்வாறு மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்