சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்கள் என்ன செய்தார்கள்?

எழுத்தாளர் Bella Dalima

06 Sep, 2017 | 4:05 pm

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னர் Bronze Age காலகட்டத்தில் ஐரோப்பியப் பெண்கள் தங்கள் குடும்பங்களை உருவாக்குவதற்காக தூர தேசப் பயணங்களை மேற்கொண்டு, புதிய கலாசார விடயங்களைக் கற்றனர்.

புதிய வாழ்க்கைக்காக இடமாற்றத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்டனர்.

அதே நேரத்தில், ஆண்கள் தாங்கள் பிறந்த பகுதியிலேயே தங்கிவிட்டனர். இப்பழக்கம் கிட்டத்தட்ட 800 ஆண்டு காலம் இருந்து வந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு.

அக்காலத்துப் பெண்கள் கலாசார பொருட்கள் மற்றும் கருத்துக்களின் பரிமாற்றத்தை நிகழ்த்துவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தனர்.

இது Bronze Age இல் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Bronze Age என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், கி.மு.1650 காலகட்டத்தில் புதைக்கப்பட்ட 84 நபர்களின் எச்சங்களைப் பரிசோதித்து, Stone Age முடிவில் மற்றும் Bronze Age இன் ஆரம்பகட்டத்தில் அம்மக்கள் வியக்கத்தக்க வகையினில் தெற்கு லெக், தெற்கு ஆக்ஸ்பர்க் (இந்நாளைய ஜெர்மனியில்) தங்களுடைய குடும்பத்துடன் குடிபுகுந்திருந்தனர் என்பதைக் கண்டறிந்தனர்.

இதில் பெரும்பான்மையான பெண்கள் இப்பகுதிக்கு வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

ஒருவேளை, போஹேமியா அல்லது மத்திய ஜெர்மனியிலிருந்து அவர்கள் வந்திருக்கக்கூடும். ஆனால், ஆண்கள் அதே பிரதேசத்தில் பிறந்தவர்கள் என்றும் அறியப்படுகிறது.

இந்த பெண்களின் வம்சாவளிகளில் அதிக வேறுபாடுகள் காணப்படுவதால், இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து பயணப்பட்டு கடைசியில் லெக் பிரதேசத்திற்கு வந்திருக்கலாம் என்று ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அலிஸா மிட்னிக் கூறியுள்ளார்.

ஒட்டு மொத்தக் குழுவினராகவும், சில சமயங்களில் தனிப்பட்ட பயணமாகவும் இப்பெண்களின் இடம்பெயர்வு இருந்து வந்துள்ளது. இது அவர்களுக்கு தற்காலிகமான ஒன்றல்ல. ஆண்டாண்டு காலமாக, அதாவது கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு இது தொடர் நிகழ்வாகவே இருந்துள்ளது.

கணவன் என்பவன் ஒரே இடத்தில் இருக்க, மனைவி வேறொரு இடத்திலிருந்து அங்கு வந்தவளாக இருந்து வந்தாள். ஓரிடத்தில் பிறந்து வேறு ஒரு இடத்தில் புலம் பெயர்வது என்பது காலம் காலமாக பெண்களின் நிலையாக இருந்து வருகிறது என ஆய்வாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்