தோனியின் புதிய சாதனை

தோனியின் புதிய சாதனை

தோனியின் புதிய சாதனை

எழுத்தாளர் Staff Writer

04 Sep, 2017 | 11:03 am

இலங்கைக்கு எதிரான 5ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் காப்பாளராக மகேந்திரசிங் தோனி, 100 ஆவது ஸ்டம்பிங் செய்து புதிய சாதனை படைத்தார்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா முழுமையாக கைப்பற்றியது, அத்துடன், 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 4 போட்டியிலும் இந்தியாவே வெற்றி பெற்றது.

இரு அணிகள் மோதும் 5 ஆவது மற்றும் கடைசி போட்டி நேற்று (03) நடைபெற்றது.

மழை குறுக்கிட்டதால் டாஸ் போட தாமதம் ஏற்பட்டது. டாசில் வென்ற இலங்கை அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

முதலில் விக்கெட்டுக்களை இழந்தாலும் திரிமான்ன -மத்யூஸ் ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இந்நிலையில், இலங்கை அணியின் தனஞ்ஜயவை விக்கெட் காப்பாளர் தோனி ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார்.

இது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவரது நூறாவது ஸ்டம்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்மூலம் இலங்கை விக்கெட் காப்பாளர் சங்கக்காரவின் உலக சாதனையை தோனி முறியடித்துள்ளார்.

அவரது புதிய சாதனைக்கு ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்