வட கொரியா 6 ஆவது தடவையாகவும் அணுவாயுத பரிசோதனையை நடத்தியுள்ளது – ஜப்பான்

வட கொரியா 6 ஆவது தடவையாகவும் அணுவாயுத பரிசோதனையை நடத்தியுள்ளது – ஜப்பான்

வட கொரியா 6 ஆவது தடவையாகவும் அணுவாயுத பரிசோதனையை நடத்தியுள்ளது – ஜப்பான்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 2:18 pm

வட கொரியா ஆறாவது தடவையாகவும் அணுவாயுத பரிசோதனையை நடத்தியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு பேரவையுடனான சந்திப்பை அடுத்து கிடைத்த தரவுகளை ஆராய்ந்ததன் பின்னரே கருத்து தெரிவித்துள்ளதாக ஜப்பான் வௌியுறவுத்துறை அமைச்சர் தரோ கொனோ கூறியுள்ளார்.

வடகொரியாவில் இன்று முற்பகல் 6.3 ரிக்டர் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

இந்த நில அதிர்வு வெடிப்பினால் ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் இன் டைரஜன் குண்டொன்றை பரீட்சிக்கும் காட்சிகள் அடங்கிய நிழற்படங்கள் சில வெளியாகி ஒரு சில மணித்தியாளங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக தேசிய பாதுகாப்பு பேரவை கூட்டத்தை நடத்துவதற்கு வடகொரியா நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் வட கொரியாவின் மற்றொரு அணுஆயுத சோதனை முயற்சி முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்

சீனாவின் பூகம்ப நிர்வாக அமைப்பு இந்த நிலநடுக்கத்தை அணுஆயுத வெடிப்பு என்று சந்தேகித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்