வட கொரியாவின் ஐதரசன் குண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கண்டனம்

வட கொரியாவின் ஐதரசன் குண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கண்டனம்

வட கொரியாவின் ஐதரசன் குண்டு பரிசோதனைக்கு உலக நாடுகள் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 8:43 pm

வட கொரியாவின் ஐதரசன் குண்டு பரிசோதனைக்கு அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

வட கொரியாவின் கருத்துக்களும் செயற்பாடுகளும் அமெரிக்காவுக்கு பகையானதும் ஆபத்தானதுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் இது பாரிய அச்சுறுத்தல் என ரஷ்யா தெரிவித்துள்ளது.

சர்வதேச கண்டனங்களையும் மீறி வட கொரியா அணுவாயுத பரிசோதனை மேற்கொண்டுள்ளதாக சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

வட கொரியாவின் தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து ஐ.நா பாதுகாப்புச் சபையின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆறாவது அணுவாயுத பரிசோதனை முழுமையாக வெற்றியளித்துள்ளதாக வட கொரியா பெருமிதத்துடன் அறிவித்துள்ளது.

ஐதரசன் குண்டை எறிகணையில் செலுத்தி பயன்படுத்த முடியும் எனவும் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அணுவாயுதங்களைவிடவும் இது அதிக பலம் பொருந்தியது எனவும் வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்த பரிசோதனையின் போது வட கொரியாவில் 6.3 ரிக்டரில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் உடனடி தேசிய பாதுகாப்புப் பேரவை கூட்டத்தை நடத்துவதற்கு தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்