மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மழையுடனான வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 8:11 pm

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, களுத்துறை, கேகாலை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இதேவேளை, கிளிநொச்சியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – இரணைமாதா நகரில், நேற்று (02) பிற்பகல், மழை பெய்த சந்தர்ப்பத்தில் குளித்துக் கொண்டிருந்த தம்பதியர், மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

இதன்போது, 41 வயதான பெண் உயிரிழந்ததுடன், அவரது கணவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டார்.

நாட்டின் பெரும்பாலாள பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில், இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், மின்னல் தாக்கங்களை தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்