மட்டக்களப்பில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

மட்டக்களப்பில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 5:49 pm

மட்டக்களப்பின் சில பகுதிகளில் அதிகரித்து வரும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.

இதனைத் தவிர சொத்துக்களுக்கும் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

25.02.2017
மட்டக்களப்பு கரடியனாறு மாவடியோடை பகுதியில் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி அதிகாலை காட்டு யானைத் தாக்கியதில் ஒருவர் பலி.

29.07.2017
மட்டக்களப்பு – வெல்லாவௌி பகுதியில் ஜூலை மாதம் 29 ஆம் திகதி யானை தாக்கி ஒருவர் பலி.

20.08.2017
உறுகாமத்தில் சண்முகராஜ் கோமளராணி என்பவருக்கு சுயதொழிலுக்காக வழங்கப்பட்ட பாய் பின்னும் கொட்டகை கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி காட்டு யானையினால் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.

02.09.2017
மட்டக்களப்பு – புத்தடிமடு பகுதியில் யானை தாக்கி 62 வயதான தம்பிராசா திருச்செல்வம் நேற்று (02) உயிரிழந்தார்.

மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கித்துள் சர்வோதய நகர் கிராமத்தில் யானைகள் அண்மைக்காலமாக கிராமத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி மக்களையும் அச்சத்திற்குள்ளாக்கும் நிலையினை ஏற்படுத்திவருகின்றது.

அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சனை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

யானைவேலி அமைப்பதற்கான மரக்கட்டைகள் பல இடங்களில் போடப்பட்டு அவை அழிவடைந்துள்ளன.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுப்பதில் நிலவும் தாமதத்திற்கு காரணம் என்ன?

 

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களே!!!

இது உங்களின் கவனத்திற்கு…..

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்