நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2017 | 2:44 pm

நீர்கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

வீதியோரமாக உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் மீது கொள்கலனொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் 50 வயதான ஒருவரே உயிரழந்துள்ளதுடன் சடலம நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கொள்கலனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொச்சிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்