ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Staff Writer

02 Sep, 2017 | 7:39 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 66 ஆவது வருட பூர்த்தி விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு – கெம்பல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிக்கு அமைப்பு, கிளை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ,தொகுதி அமைப்பாளர்கள் உட்பட கட்சியின் அனைத்துத் தொகுதிகளினதும் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளவுனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

மக்கள் அதிகாரம் சரியானவர்கள் கையில் எனும் தொனிப்பொருளில் இம்முறை 66 ஆவது வருட பூர்த்தி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்