எந்தவொரு மீன்பிடித் துறைமுகத்தையும் விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ போவதில்லை: மஹிந்த அமரவீர

எந்தவொரு மீன்பிடித் துறைமுகத்தையும் விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ போவதில்லை: மஹிந்த அமரவீர

எந்தவொரு மீன்பிடித் துறைமுகத்தையும் விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ போவதில்லை: மஹிந்த அமரவீர

எழுத்தாளர் Bella Dalima

01 Sep, 2017 | 7:41 pm

இலங்கையிலுள்ள எந்தவொரு மீன்பிடித்துறைமுகத்தையும் விற்கவோ, குத்தகைக்கு வழங்கவோ போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் கீழ் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மேலும் சில துறைமுகங்களை அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் குறிப்பிட்ட மஹிந்த அமரவீர, துறைமுகங்களை விற்கப் போவதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என சுட்டிக்காட்டினார்.

துறைமுகங்களின் செயற்திறனை மேம்படுத்தும் வகையில், தனியார் துறையின் பங்களிப்புடன் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

துறைமுகங்களை அண்மித்த பகுதிகளில் கடல் வளம்சார் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்