Bestweb 2018
Bestweb 2018

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதி

லலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதி

By Bella Dalima

08 Sep, 2017 | 8:23 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் இன்று பகல் அனுமதிக்கப்பட்டனர்.

சிறைச்சாலைகள் வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் 600 மில்லியன் ரூபாவை செலவிட்டு, சில் துணி விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் நேற்று (07) குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று பகல் வரை வெலிக்கடை சிறைச்சாலையின் K கட்டடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.