Bestweb 2018
Bestweb 2018

மஸ்கெலியா லெங்கா தோட்டத்தில் கறுப்பு ஆடையணிந்து மாணவர்களை அச்சுறுத்தும் நபர்கள் யார்?

மஸ்கெலியா லெங்கா தோட்டத்தில் கறுப்பு ஆடையணிந்து மாணவர்களை அச்சுறுத்தும் நபர்கள் யார்?

By Bella Dalima

13 Sep, 2017 | 8:28 pm

மஸ்கெலியா – லெங்கா தோட்டத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கறுப்பு நிற ஆடையணிந்த மூவர் பிரதேசத்தில் நடமாடுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

லெங்கா தோட்டத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் தனியாக பாடசாலை சென்ற ஒரு மாணவியை, கறுப்பு நிற ஆடையணிந்து முகத்தை மூடியவாறு வந்த ஒருவர் அச்சுறுத்தியதாக தகவல் பதிவாகியது.

இதனை அடுத்து, இந்தத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் தனியாக செல்லாமல் பாதுகாப்பாக செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், இன்று மீண்டும் ஒரு மாணவி பாடசாலை செல்ல சற்று தாமதமாகியமையினால் தனியாக சென்ற போது, கறுப்பு நிற ஆடையணிந்த மூவர் தன்னை அச்சுறுத்த முற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் கையில் கத்தி வைத்திருந்தாகவும் சம்பவத்தை எதிர்நோக்கிய மாணவி தெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது அம்மாணவி சத்தமிட்டதால் சற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்த தோழிகளும் கண்காணியும் ஓடிச்சென்றுள்ளனர்.

இதன்போது அதிர்ச்சியடைந்த 11 மாணவர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 8 மாணவிகளும் 3 மாணவர்களும் அடங்குகின்றனர்.

லெங்கா தோட்டத்தில் பதிவாகும் இந்த சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.