Bestweb 2018
Bestweb 2018

மத்திய மாகாண வைத்தியசாலைகளின் கதிரியக்கப் பிரிவு அதிகாரிகள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

மத்திய மாகாண வைத்தியசாலைகளின் கதிரியக்கப் பிரிவு அதிகாரிகள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு

By Bella Dalima

14 Sep, 2017 | 4:01 pm

மத்திய மாகாண வைத்தியசாலைகளிலுள்ள கதிரியக்கப் பிரிவு அதிகாரிகள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சினால் உரிய வகையில் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச கதிரியக்கப் பிரிவு சங்கத்தின் பிரதம செயலாளர் ஈ. தர்மகீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (15) காலை 8 மணி வரை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இடமாற்றக் கொள்கைக்கு அமைய, தகுதியானவர்களுக்கு இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை எனவும் ஈ. தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நுவரெலியா மற்றும் கண்டி பேராதெனிய போன்ற வைத்தியசாலைகளின் கதிரியக்கப் பிரிவுகளில் நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.