நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிற்கு அழைப்பாணை

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிற்கு அழைப்பாணை

By Bella Dalima

Sep 14, 2017 | 4:16 pm

எதிர்வரும் 20 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பலப்பிட்ட ஆகியோர் சார்பில், அவர்களின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு இன்று பரீசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சட்ட மா அதிபருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது , இலங்கை தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் 600 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி சில் துணி விநியோகித்தமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, கடந்த 7 ஆம் திகதி லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பலப்பிட்ட ஆகியோர் கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.