Bestweb 2018
Bestweb 2018

தீக்காயங்களுக்குள்ளான கீதா குமாரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

தீக்காயங்களுக்குள்ளான கீதா குமாரசிங்க வைத்தியசாலையில் அனுமதி

By Sujithra Chandrasekara

02 Sep, 2017 | 4:03 pm

பிரபல நடிகையும், பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்கவின் வீட்டில் இன்று முற்பகல் ஏற்பட்ட விபத்து காரணமாக தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் கீதா குமாரசிங்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாவல பகுதியிலுள்ள அவரது வீட்டில் சமயலரை வாயு சிலின்டர் வெடித்ததில் இன்று (02) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

கீதா குமாரசிங்கவின் கை, கால் மற்றும் வயிறு பகுதி என்பன தீகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.