Bestweb 2018
Bestweb 2018

சுதேச மருத்துவ சிகிச்சைகளுக்காக கஞ்சா செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – ராஜித சேனாரத்ன

சுதேச மருத்துவ சிகிச்சைகளுக்காக கஞ்சா செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை – ராஜித சேனாரத்ன

By Sujithra Chandrasekara

13 Sep, 2017 | 12:59 pm

சுதேச மருத்துவ சிகிச்சைகளுக்காகவும், வௌிநாடுகளில் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்காகவும் இலங்கையில் கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

கடும் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கருத்து வௌியிட்டபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.