குகுலே கங்கையின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நிலப் பகுதிகள் நோக்கி நீர் வௌியேற்றம்

குகுலே கங்கையின் வான் கதவுகள் திறப்பு: தாழ்நிலப் பகுதிகள் நோக்கி நீர் வௌியேற்றம்

By Bella Dalima

Sep 14, 2017 | 3:37 pm

குகுலே கங்கையின் வான் கதவுகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் ஷாந்த பெரேரா தெரிவித்தார்.

நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு நேற்று (13) காலை 5 மணியளவில் திறந்துவிடப்பட்டதாகவும் விநாடிக்கு 50 கன அடி வௌியேறுவதாகவும் நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் தெரிவித்தார்.

வௌியேறும் நீர் தாழ்நிலப் பகுதிகள் நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலர் வலயங்களில் கடந்த நாட்களில் 83 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

கடந்த கால வௌ்ள அனர்த்த நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, குறைந்தளவிலான நீரே வௌியேற்றப்பட்டு வருவதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் ஷாந்த பெரேரா மேலும் தெரிவித்தார்.