Bestweb 2018
Bestweb 2018

அர்ஜூன் அலோசியசை சாட்சி வழங்குமாறு வற்புறுத்த முடியாது: ஜனாதிபதி ஆணைக்குழு

அர்ஜூன் அலோசியசை சாட்சி வழங்குமாறு வற்புறுத்த முடியாது: ஜனாதிபதி ஆணைக்குழு

By Bella Dalima

13 Sep, 2017 | 8:09 pm

அர்ஜூன் அலோசியஸ் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக சாட்சி வழங்க வேண்டி ஏற்படின், அதனைச் செய்யுமாறு ஆணைக்குழுவினால் அவரை வற்புறுத்த முடியாது என முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு இன்று குறிப்பிட்டது.

அர்ஜூன் அலோசியஸின் சட்டத்தரணிகள் மற்றும் பதில் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் திங்கட்கிழமை (11) முன்வைத்த விடங்களை இன்று ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு, தமது விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு அலோசியஸின் சாட்சிகள் அவசியம் என குறிப்பிட்டது.

அர்ஜூன் அலோசியஸ் தொடர்பில் எழுந்துள்ள விடயங்கள் மற்றும் அவரின் நிலைப்பாடு தொடர்பில் தௌிவுபடுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தை நிராகரிப்பதாக இருந்தால், ஆணைக்குழு முன்பாக உள்ள மற்றும் முன்வைக்கப்படும் சாட்சியங்களை அடிப்படையாக வைத்து செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இன்று அறிவிக்கப்பட்டது.

அர்ஜூன் அலோசியசுக்கு அழைப்பாணை விடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவர் ஆணைக்குழு முன்பாக ஆஜராக வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு இன்று குறிப்பிட்டது.

அர்ஜூன் அலோசியஸ் சாட்சி வழங்குவது அவசியமானது என்பது தமது முடிவு எனவும் ஆணைக்குழு இன்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.